சொகுசு கப்பலில் போதைபொருள் விருந்து தொடர்பான வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை என்.சி.பி காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில் மேலும் 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. மும்பையிலிருந்து கோவாவுக்கு சென்ற சொகுசு கப்பலில் கேளிக்கை விருந்து நடத்தப்பட்டது. இதில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக போதை தடுப்புப் பிரிவினருக்கு வந்த தகவலின் பேரில் கப்பலில் சோதனை நடத்தப்பட்டது. இதில் போதைப் பொருளுடன் இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் […]
