சசிகலா ஓட்டு போட முடியாது என்று சற்றுமுன் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நாளை தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சிறை சென்ற சசிகலா கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியனார். இதையடுத்து முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார். பின்னர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிக்கையும் வெளியிட்டார். இதையடுத்து இந்த சட்ட மன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலிலிருந்து சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
