தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான போட்டி தேர்விற்கு தயாராகும் இளைஞர்களுக்கு கருவி புத்தகம் உரியபயிற்சி போன்றவை கிடைப்பதில்லை. அதற்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் 40 லட்சம் மதிப்பிலான மதுரையில் உள்ள 85 நூலகங்களுக்கு தமிழ், ஆங்கிலம் என 164 புத்தகங்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு கொண்ட 13 ஆயிரம் புத்தகங்களை வழங்க இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார். அதனை நிறைவேற்றும் விதமாக இன்று காலை தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமை […]
