எரிபொருள் தட்டுப்பாட்டினால் பிரித்தானியாவில் போட்டி சட்டத்தை அரசாங்கம் அமல்படுத்த இருக்கின்றது. எரிபொருள் தட்டுப்பாட்டினால் மக்கள் அச்சம் அடைவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பிரித்தானியாவில் போட்டி சட்டத்தை அரசாங்கம் அமல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் HGV டிரைவர்களின் பற்றாக்குறையால் பெட்ரோல் விநியோகத்தின் நிலைமையானது மோசமடைந்து இருக்கிறது. இதன் காரணமாக நாட்டில் மிகப்பெரிய எரிபொருள் தட்டுப்பாடு உருவாகும் என்ற பீதியில் மக்கள் அனைவரும் தங்கள் வாகனங்கள் மட்டுமின்றி கூடுதல் கேன்களில் பெட்ரோலை நிரப்பி வருகின்றனர். இந்நிலையில் ஏராளமான நிலையங்களில் எரிபொருள் தீர்ந்துவிட்டது. […]
