தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தருவை மைதானத்தில் நேற்று தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு இடையேயான 39 வது மண்டல அளவிலான விளையாட்டு போட்டி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு தொல்லியல் பயிற்சி நிலைய முதல்வர் வேல்முருகன், நெல்லை மண்டல பயிற்சி இணை இயக்குனர் செல்வகுமார், வ.உ.சி துரைமுக ஆணைய மேற்பார்வை இன்ஜினியர் வேத நாராயணன், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். […]
