சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமானநிலையத்திற்கு கிண்டி வழியாகச் செல்லும் வாகனங்கள் பிரதான நுழைவாயில் வழியாகவும், தாம்பரம், பல்லாவரம் வழியாக வரும் வாகனங்கள் விமான நிலைய காவல் நிலையம் அருகே உள்ள நுழைவாயில் வழியாக செல்வதற்கும் அனுமதிக்கப்பட்டன. சென்ற ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக தாம்பரம் பகுதியிலிருந்து வரும் வாகனங்களுக்கான நுழைவு வாயில் அடைக்கப்பட்டது. இதனால் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் பிரதான நுழைவு வாயில் வழியாக வந்து செல்ல வேண்டும் என்ற […]
