கடலூர் மாவட்டத்தில் உள்ள சிப்காட் ரசாயன தொழிற்சாலையில் இருந்து மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் குறுக்கு வழியை தேடிய முருகன் கூகுள் மேப் உதவியை நாடியுள்ளார். அதன்படி கூகுள் மேப் மூலம் முருகன் புதுநகர், இம்பீரியல் சாலை வழியாக லாரன்ஸ் ரோட்டுக்கு வந்தார். அங்கு ஒரு சுரங்கப்பாதை இருந்தது. அப்போது அங்கிருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் கனரக வாகனங்கள் இந்த வழியாக செல்ல முடியாது. […]
