தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதத்தை உயர்த்தி புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் படி வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதி மீறல் குற்றத்திற்காக அதிக அளவில் அபராத தொகை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் வாகன ஓட்டிகளிடம் அபராத தொகையை தவிர காவல் துறையினர் யாராவது லஞ்சம் பெற்றால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தற்போது எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. […]
