ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் இருந்து அரசு பேருந்து பயணிகளுடன் பண்ணாரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்தின் மேற்கூரையில் இருக்கும் துவாரம் வழியாக மழைநீர் சொட்டு சொட்டாக வழிந்து இருக்கைகள் நனைந்ததால் பயணிகள் உட்கார முடியாமல் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். பேருந்துக்குள் அனைவரும் நின்று கொண்டே பயணித்த காட்சியை ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதுகுறித்து அறிந்த சத்தியமங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் சம்பந்தப்பட்ட அரசு பேருந்தை பார்வையிட்டு அதன் தகுதி சான்றை […]
