கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகண்டறை நோக்கி அரசு பேருந்து பயணிகளுடன் மார்த்தாண்டத்தில் இருந்து புறப்பட்டது. இந்த பேருந்தை பத்மகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஆற்றூர் மங்களா அருகே சென்ற போது எதிரே இன்னொரு அரசு பேருந்து வந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் இரண்டு பேருந்துகளுக்கும் நடுவே புகுந்து செல்ல முயன்ற போது நிலைதடுமாறி அவர் வைத்திருந்த பொருட்கள் கீழே விழுந்தது. அப்போது பத்மகுமார் மோட்டார் சைக்கிள் வந்தவரை கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் […]
