சேலம் மாவட்டம் கந்தம்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிகாரிகள் லஞ்சம் பெற்றது தெரியவந்துள்ளது. கந்தம்பட்டி உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன புதுப்பித்தல் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் லஞ்சம் ஒழிப்பு காவல்துறையினர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது கணக்கில் வராத ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 300 ரூபாய் பணம் […]
