செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், தமிழக போக்குவரத்து துறை என்றாலே கலைஞர் கருணாநிதி தான் நினைவுக்கு வருவார். அதற்கு காரணம் போக்குவரத்தை அரசுடைமை ஆக்கியது அவர்தான். மற்ற மாநிலங்களில் நகரங்களில் மட்டும் தான் போக்குவரத்து வசதி உள்ளது. கிராமப்புறங்களில் கிடையாது. தமிழகத்தில் தான் அனைத்து கிராமங்களுக்கும் போக்குவரத்து சேவை உள்ளது. இதனால் கிராமத்தில் உள்ளவர்கள் நகரத்திற்கு வந்து கல்வி கற்கவும் தொழில் செய்யவும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக கிராமப்புற மக்களுடைய வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. […]
