பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் மற்றும் திமுக தலா 3 முறை வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக 9 முறை தொகுதியை கைப்பற்றி உள்ளது. தற்போதய எம்எல்ஏ அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன். பொள்ளாச்சி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,25,777 ஆகும். பொள்ளாச்சியில் தென்னை நலவாரியம் அமைக்க வேண்டும். இளநீருக்கு 25 ரூபாயும், தேங்காய்க்கு 30 ரூபாயும் ஆதரவு விலையாக நிர்ணயிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. பொள்ளாச்சி சந்தையில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்பது […]
