சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்திய சுதந்திரப் போரில் வரலாற்றுப் பதிவாக கொங்கு மண்டலத்தில் இருப்பது தீரன் சின்னமலை ஆங்கிலப் படைகளை எதிர்த்து நடத்திய போர். இந்த தீரன் சின்னமலையின் போர் படையில் முக்கிய தளபதியாக இருந்தவர்தான் பொல்லான். பொல்லான் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டது. ஒடுக்கப்பட்ட சமூகம் என்பதால் அரசு அலட்சியப்படுத்துகிறது என்ற குரல்களும் எழுந்தது. முதலமைச்சரிடம் பல்வேறு அமைப்பு சார்பில் […]
