எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் தமிழ்நாட்டில் எம்ஜிஆரின் பொற்கால ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவோம் என்று கூறியிருக்கிறார்கள். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், வாழ்க்கை என்ற பயணத்தில் பலர் வருவர், பலர் போவர் எனினும் சிலர் மட்டுமே நிலைத்து நிற்பர். அந்த வரிசையில் முதலமைச்சராக நம் உள்ளம் எல்லாம் நிறைந்திருந்தவர் எம்ஜிஆர் அவர்கள். ஏழ்மையான […]
