தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வகையில் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு 4 பொறுப்பாளர்களை தேமுதிக நியமித்துள்ளது. அதன்படி வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மற்றும் தென்காசி […]
