பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கியது. இதில் முதற்கட்டமாக முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 668 மாணவர்களுக்கு இடம் […]
