உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக பாதிக்கப்பட்டு படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். உக்ரைனிலிருந்து திரும்பிய சுமார் 20,000 மாணவர்களின் கல்வி எதிர்காலம் தொடர்பாக நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவிலுள்ள தொழில்நுட்பம் கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்களை உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு வழங்க அகிலஇந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலானது வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இது குறித்து இந்த மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து அகிலஇந்திய தொழில்நுட்பகல்வி […]
