இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பாக ஆராய 3 தமிழர்கள் கொண்ட குழுவை அந்நாட்டு அரசு நியமித்திருக்கிறது. கொரோனா காரணமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கை நாட்டில், பொதுமக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அரசுக்கு எதிராக முதலில் பொதுமக்கள், இளைஞர்கள் போராட தொடங்கிய நிலையில், தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து மெகா போராட்டமாக வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் நாட்டில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக ஆராயவும், சர்வதேச […]
