ஒற்றை தலைமை விவகாரம் எழுந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகள் உருவாகியுள்ள நிலையில் இரு தரப்பும் மாறி மாறி எதிர்த்தரப்பை விமர்சித்து பேசுவது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நான்கு மாதங்களாக இதுதான் நிலைமை என்றாலும் சமீப நாள்களில் இருதரப்பு வார்த்தைகளில் சுற்று மூர்க்கமாக மோதுகிறார்கள். திரைக்குப் பின்னர் நடந்த நிகழ்வுகள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து நத்தம் விஸ்வநாதனை வைத்திலிங்கம் அடிக்கப் பயந்தார் என்று நாமக்கலில் […]
