தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருக்கிற அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தமிழரின் மாண்பையும், தமிழரின் மரபையும், தமிழரின் தொன்மையும், இறை நம்பிக்கையையும் இழிவுப்படுத்தும் செயல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக தாய்மார்களை தமிழினத்தை அவமதிக்கும் கருத்திற்கு கோவை மாவட்டத்தில் ஜனநாயக ரீதியாக எதிர்ப்பு தெரிவித்த பாஜக தொண்டர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து வருகின்ற 26 ஆம் தேதி அறவழியில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படுகின்றது. […]
