பெற்றோர்கள் அனைவரும் பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவரையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார். குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இடைநில்லா கல்வி தடையில்லா வளர்ச்சி என்ற இலக்கினை நோக்கி பயணிப்போம் என அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” “கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஊர் தோறும் பள்ளிகள் திறந்து […]
