லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு தெருவில் தீடிரென போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிரித்தானியா தலைநகரான லண்டனில் திடீரென போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறை தகவல் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். அதில் “Westminsterரில் உள்ள ஆக்ஸ்போர்டு தெருவில் மர்மநபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளதாக எங்களுக்கு 9.30 மணியளவில் அழைப்பு வந்தது. இதனையடுத்து அந்த இடத்திற்கு சிறப்பு அதிகாரிகள் அனுப்பப்பட்டன. மேலும் அவர்கள் அங்கு மர்ம நபரைத் தேடும் பணியைத் தொடங்கியுள்ளனர். […]
