அணைக்கட்டுக்கு உட்பட்ட பொய்கை வாரச்சந்தையில் அதிகாரிகளே சுங்கக் கட்டணத்தை வசூல் செய்துள்ளனர். அணைக்கட்டு ஒன்றியத்திற்கு எல்லைக்குட்பட்ட பொய்கை வாரச்சந்தையில் வியாபாரிகளிடமிருந்து சுங்கக்கட்டணம் ஆண்டிற்கு ஒருமுறை வசூலிக்கப்படுகின்ற நிலையில் கொரோனா தாக்கத்தின் காரணமாக சென்ற இரண்டு வருடங்களாக ஏலம் நடத்தவில்லை. இந்நிலையில் 2022-2023 ஆம் வருடத்திற்கான ஏலமானது வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்ததைத் தொடர்ந்து முடிவு செய்த இலக்கிற்கு தொகை ஏலம் போகவில்லை என்பதால் சுங்க கட்டணத்தை அதிகாரிகளே வசூல் செய்ய முடிவு எடுத்தனர். இதன் விளைவாக இன்று […]
