டாய்கேத்தான் 2021 போட்டியின் பங்கேற்பாளர்கள் உடன் காணொலி காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி உள்ளூர் பொம்மை தொழிலுக்கு ஆதரவாக நாம் குரல் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அகில இந்திய அளவில் ஒன்றிய அரசு நடத்திய டாய்கேத்தான் 2021 போட்டியின் இறுதி சுற்று நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக பேசினார். அதில் அவர் கூறியதாவது பெரும்பாலான ஆன்லைன் விளையாட்டுகள் வன்முறையை ஊக்குவிப்பதுடன் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துவதாக […]
