சொத்து தகராறில் தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு பொம்மையாபுரம் கிராமத்தில் ஆறுமுகம் என்ற புலிப்பாண்டி வசித்து வருகின்றார். இவருக்கு முனியசாமி, முருகன் என்ற 2 மகன்கள் இருந்தனர். இதில் முனியசாமிக்கு இன்னும் திருமணம் முடியவில்லை. இவர்களில் முருகன் கூலி வேலை செய்து வந்தார். இந்த சகோதரர்கள் இருவருக்கும் இடையில் கடந்த சில வருடங்களாக சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் முருகன் ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள சிலோன் காலனியை […]
