தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கைக்கான காரணத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஸ்கில் டேவலப்மன்ட் என்று ஸ்கில் ஸ்டேட்மென்ட் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். அதற்காக 60 கோடி ரூபாய் அரசாங்கமே கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திறமைகளை வளர்ப்பதற்கு, துறைகளை வளர்ப்பதற்கு முதலமைச்சர் ஒதுக்கி இருக்கின்றார். அந்த அடிப்படையில் வருகின்ற காலங்களில் பொறியியல் கல்லூரிகள்அனைத்தும் வளர்ச்சி பெறும். குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளும் வளர்ச்சி பெறும். […]
