விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பொன்பத்தி ஏரி புதிய பறவைகள் சரணாலயமாக மாறி வருவதால் சுற்றுவட்டார மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செஞ்சி முதல் பொன்பத்திஏரி வரை உள்ள ஏரிக்கரை பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அண்மையில் பெய்த மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து கடல் போல் காட்சி அளிக்கிறது. மேலும் கருவேல மரங்கள் அதிகமாக உள்ளதால் பறவைகள் தங்குவதற்கு ஏற்ற இடமாகவும் ஏரிப்பகுதி மாறி உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பறவைகள் கூட்டம், கூட்டம் […]
