கலெக்டர் அலுவலகம் முன்பு பொது வழித்தட பிரச்சினையால் 5 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது மேச்சேரி அருகே உள்ள குக்கல்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இவர்களில் மோகலட்சுமி, சத்யா, பரமேஸ்வரி , அலமேலு , மணிமேகலை […]
