ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட காரை மேட்டுத்தெரு வார்டுஎண் 2 மற்றும் 19 ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை ராணிப்பேட்டை-தெங்கால் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் ஆகியோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது குடிநீர் வினியோகம் […]
