தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளதால் நேற்று மாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.அதிலும் குறிப்பாக சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. இந்நிலையில் மழை தீவிரமானால் வீடுகளுக்குள் பாம்புகள் அடைக்கலம் நாடுவதும் தொடங்கிவிடும்.அந்த வகையில் சென்னையில் வீடுகளுக்குள் பாம்பு […]
