புத்தாண்டு கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் மிகவும் அமைதியான முறையில் நடந்தது தொடர்பாக பொது மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு. புத்தாண்டு தொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, இன்று ஆங்கில புத்தாண்டு தினம் தமிழகமெங்கும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், கொண்டாட்டங்களின் போது சாலை விபத்துகளை தடுப்பதற்காகவும், தமிழ்நாடு காவல்துறை புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. அதன்படி ஓரிரு சாலை விபத்துகள், ஓரிரு சச்சரவுகள் தவிர […]
