Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வாக்களிக்க சென்ற பொதுமக்கள்…. வாக்குச்சாவடியில் குழப்பம்…. தேர்தல் அதிகாரிகளின் கவனக்குறைவு…!!

தேர்தல் ஆணையத்தின் கவனக்குறைவால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகளில் ஊரக  உள்ளாட்சி தேர்தல் 2021  என எழுதப்பட்டிருந்தது. இதனைக்கண்டு வாக்களிக்க சென்ற பொதுமக்கள் மிகுந்த குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அதாவது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 என எழுதப்படுவதற்கு பதிலாக ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 என எழுதப்பட்டிருந்துள்ளது. இதனால்  குழப்பமடைந்த பொதுமக்கள் தேர்தல் அதிகாரிகளின் ‌ கவனக்குறைவே இதற்கு காரணம் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் குடிநீர் இன்றி தவிக்கும் பொதுமக்கள் …!!

நீர் மேலாண்மையில் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளதாக தமிழக அரசு மார்தட்டிக் கொள்ளும் நிலையில் 14 ஆண்டுகளாக குடிநீரின்றி தவிப்பதாக மதுரை தனக்கன்குளம் பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட தனக்கன்குளம் பகுதியில் உள்ள வெண்கலம் மூர்த்தி நகரில் கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 170 வீடுகள் கட்டப்பட்டு 170 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒருநாள் மழைக்கே தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை …!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னையில் ஒரேநாளில் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தமிழகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடாது மழை பெய்தது. விட்டுவிட்டு பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல கரைபுரண்டு ஓடியது. குறிப்பாக சென்னை நகரில் பிரதான சாலைகளான அண்ணா சாலை, ஜிபி ரோடு, பெரியார் சாலைகளில் சூழ்ந்த மழைநீரால்  […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அதிகாரிகள் அலட்சியத்தால் தெருவில் நெல்லை குவித்துவைத்து காத்திருக்கும் அவலம் ….!!

நாகையில் நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்காக 50 ஆயிரம் ரூபாய் சொந்த செலவில் கிடங்கு அமைத்துக் கொடுத்த விவசாயிகள் அரசு அதிகாரிகள் அலட்சியத்தால் வீதிகளில் நெல்லைக் கொட்டி காத்திருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டத்தில் குறுவை அறுவடை நடைபெற்று வருவதை தொடர்ந்து நெல்லை கொள்முதல் செய்வதற்கு 80 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நிரந்தர கட்டிடங்கள் உள்ள இடங்களில் மட்டுமே கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று நுகர்பொருள் வாணிப கழகம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடிநீர் பஞ்சம் – 8 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம்

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுவதாக பொதுமக்கள்     குற்றம்சாட்டியுள்ளனர்.   கம்பம் நகராட்சியின் இருபத்தி எட்டாவது வார்டு பகுதியில் 8 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது அதுவும் சுத்திகரிக்கப்படாமல் விநியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் இருப்பதால் குடிப்பதற்கு கூட பயன்படுத்த முடிவதில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் எந்தவித உதவியும் வழங்கப்படாததால் பட்டினியால் தவிப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர் இது குறித்து கம்பம் […]

Categories

Tech |