ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரிகியம் மலை கிராமத்தை சேர்ந்த சித்துமாரி (55) என்பவர் உடல் நலகுறைவு காரணமாக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சித்துமாரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் உறவினர்கள் ஆம்புலன்ஸில் சித்துமாரியின் உடலை மாக்கம்பாளையம் நோக்கி ஆம்புலன்ஸில் ஏற்றி வந்து கொண்டிருந்தனர். ஆம்புலன்ஸ் குரும்பூர் பள்ளம் வரை சென்றது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் குரும்பூர் பள்ளத்தில் மழை நீர் பெருக்கெடுத்து […]
