வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மாவட்டத்தில் உள்ள தனலட்சுமி நகரில் 20 நாட்களாக பெய்த மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மவுலிவாக்கம்-மாங்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். […]
