கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொட்டையாண்டி புறம்பு ஊராட்சி பகுதியில் ரஞ்சித்குமார் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வெடி வைக்கப்பட்டது. அப்போது அருகே இருந்த வீடுகள் மீது கற்கள் விழுந்து மேற்கூரை சேதமடைந்தது. இது தொடர்பாக சப் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்ததால் கடந்த சில மாதங்களாக கல்குவாரி செயல்படாமல் இருந்துள்ளது. நேற்று கல்குவாரியில் மீண்டும் பணிகள் தொடங்கியதால் கோபமடைந்த பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த வருவாய் ஆய்வாளர் கோபிலதா, […]
