மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீரென தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள புளியமரத்தோட்டம் பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது, நாங்கள் ஆய்வரும் தனியாருக்கு சொந்தமான 25 வீடுகளில் வாடகைக்கு குடியிருந்து வருகிறோம். எங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சங்கிலிப்பள்ள ஓடையில் […]
