திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே.பங்களா கிராமத்தில் 200 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்ட பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் நேற்று காலை திண்டுக்கல்-நத்தம் சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த கணவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நிஷா ராமகிருஷ்ணன், ஊராட்சி செயலர் வெற்றி வேந்தன் ஆகியோர் சாலை மறியலில் […]
