Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தலைபாலத்தை மூழ்கடித்த வெள்ளம்…. கயிறுகட்டி கடக்கும் மக்கள்…. மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை….!!

பரளை ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தரைப்பாலம் மூழ்கியதால் பொதுமக்கள் பாலத்தில் கயிறு கட்டி கடந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூருக்கு கடந்த 27ஆம் தேதி முதல் வைகை அணையில் இருந்து 12,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இந்நிலையில் பார்திபனூரில் இருந்து கமுதி பரளை ஆற்றுக்கு 5,000கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு செய்யாமங்கலம் பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியுள்ளது. இதனால் செய்யாமங்கலம், பிரண்டைகுளம், தானேந்தால், புதுபட்டி, முனியனேந்தல் போன்ற 5 கிராமத்திற்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற… மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்… அதிகாரி வெளியிட்ட தகவல்…!!

மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் தேனி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் தேனி, போடி, ராசிங்காபுரம் போன்ற உபகோட்டங்கள் பகுதியை சேர்ந்த நுகர்வோர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்திற்கு தேனி மின்வாரிய செயற்பொறியாளர் லட்சுமி தலைமை தாங்கியுள்ளார். மேலும் பொதுமக்கள் கூறிய குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுத்தைபுலி நடமாட்டம்… வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு… குண்டுகள் அமைத்து நடவடிக்கை…!!

சிறுத்தை புலியை பிடிப்பதற்கு வனத்துறையினர் தனிப்படை மற்றும் கூண்டுகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள ஈஞ்சமலை  உள்ள வனப்பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருந்து வருகின்றது. இந்நிலையில் அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருக்கும் மாடு,ஆடு போன்றவற்றை சிறுத்தை புலி அடித்துக் கொன்றுவிடுவதாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில்  வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தி சிறுத்தை புலியின் காலடி தடத்தை உறுதி செய்துள்ளனர். மேலும் 15 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் அளித்த கோரிக்கை… சூப்பிரண்டு அதிகாரி உத்தரவு… 120 கண்காணிப்பு கேமராக்கள்…!!

குற்றங்கள் அதிகரிக்கும் பகுதிகளில் 120 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டங்களில் தொடர்ந்து கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே விசாரணை நடத்தி மாவட்டத்தில் குற்றங்கள் அதிகரிக்கும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பொதுமக்களின் கோரிக்கை… சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு… வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு…!!

பொதுமக்களின் கோரிக்கையின் படி சிறுத்தையின் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள பொட்டிரெட்டிபட்டி ஊராட்சியில் கெஜகோம்பை வனப்பகுதி உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து இருப்பதாகவும், வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை அடித்துக் கொன்று விடுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையிடம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி ஆகியோர் தலைமையில் வனச்சரக அலுவலர் பெருமாள், வனவர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பச்சை நிறத்தில் உள்ள குடிநீர்… நோய் பரவும் அபாயம்… பொதுமக்கள் கோரிக்கை…!!

சாயப்பட்டறை கழிவுகள் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் பச்சை நிறத்தில் இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதாக புகார்கள் உள்ளன. இதனையடுத்து பள்ளிபாளையம், பழனியப்பா நகர், முஸ்லிம் தெரு, சின்ன வீடு, முருகன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவில் புரவி எடுப்பு விழா… அனுமதி வழங்க வேண்டும்… கிராம மக்கள் அளித்த மனு…!!

சிவகங்கை அருகே கோவில் புரவி எடுப்பு விழா நடத்த அனுமதி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். சிவகங்கை அருகே நாலுகோட்டை கிராமத்தில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் புரவி  எடுப்பு  விழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக புரவி எடுக்கும் விழா நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளதால் கோவில் புரவி எடுப்பு விழாவிற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும், நூற்றுக்கும் மேற்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து நடக்கும் குற்றங்கள்… அச்சத்தில் இருக்கும் பெண்கள்… பொதுமக்கள் கோரிக்கை…!!

வழிப்பறி திருட்டு போன்றவற்றை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் வழிப்பறி நடப்பதாக காவல்துறையினருக்கு புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பரமக்குடி பகுதியில் உள்ள காளிதாஸ் தெருவில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் 2 இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து தங்க சங்கிலியை பறித்து சென்றது அப்பகுதியில் உள்ள சிசிடிவி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதனால் குற்றங்கள் நடக்குது… 8 வருடமா திறக்கவில்லை… அவதிப்பட்டு வரும் பொதுமக்கள்…!!

தேனி மாவட்டத்தில் 8 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட ரேஷன் கடை திறக்கப்படாமல் அலைக்கழித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சியில் உள்ள 29-வது வார்டில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் ஒரு ரேசன்கடை இல்லாததால் பொதுமக்கள் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வருவது வழக்கம். இதனையடுத்து அப்பகுதி மக்களை அளித்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… நடவடிக்கை எடுக்க வேண்டும்… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் புதிய குடிநீர் குழாய்கள் அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் போகலூர் ஊராட்சி உள்ளது. அந்த ஊராட்சியில் உள்ள முகம்மதியாபுரம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அடிப்படை வசதியான குடிநீர் வசதி இல்லாத நிலையில் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனையடுத்து அப்பகுதியினர் பலமுறை இதுகுறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்து இயக்கததால் பெரும் அவதி… மீண்டும் அதே நேரத்தில் இயக்க வேண்டும்… 2 மாவட்ட மக்கள் கோரிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவில் வழக்கமாக இயக்கப்படும் அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவிலும் வழக்கமாக இயங்கும் பேருந்துகளை இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கிற்கு முன்பு தினமும் இரவு 10.50 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் பேருந்து சிவகங்கை வழியாக காளை யார்கோவில், சருகணி, திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், புதுக்கோட்டை கோட்டை பட்டினம் வரை சென்று கொண்டிருந்துள்ளது. இந்த பேருந்தின் மூலம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதை மீண்டும் திறக்க கூடாது… நிரந்தரமாக மூட வேண்டும்… பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை…!!

ராமநாதபுரத்தில் பெண்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக அடிக்கப்பட்ட அரசு மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் உள்ள தாமோதரபட்டினத்தில் அரசு டாஸ்மார்க் கடை இயங்கி வருகின்றது. இந்நிலையில் கடைக்கு அருகே ஊருணி உள்ள நிலையில் மதுபிரியர்கள் மதுபானங்களை வாங்கிக்கொண்டு ஊருணி கரையில் அமர்ந்து குடிக்கின்றனர். இதனால் ஊருணியில் குளிக்க செல்லும் பெண்களுக்கு அடிக்கடி பல்வேறு தொல்லைகள் வருகின்றது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் டாஸ்மார்க் கடையை மூட வேண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தனியார் நிறுவனம் கட்டிய தடுப்பு சுவர்… அவதிப்படும் கிராம மக்கள்… ஊராட்சி அலுவலகம் முற்றுகை…!!

ராமநாதபுரத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள கன்னிராஜபுரம் கிராமத்தில் ராமையா குடியிருப்பில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் நிறுவனம் ஓன்று ராமையா குடியிருப்பில் இருந்து கன்னிராஜபுரம் கடற்கரை சாலை வரை உள்ள ஊராட்சி பாதையில் தடுப்புச்சுவர் கட்டியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என கிராம […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இது எங்களுக்கு பத்தாது… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்… அரசின் செயல்…!!

குறைவான அளவில் பேருந்துகள் அனுமதித்ததால் பொதுமக்கள் பயணம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணத்தினால் சென்ற 2 மாதங்களாக போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தளர்வுகளை அரசு அறிவித்ததினால் போக்குவரத்துக்கு தற்போது அனுமதி வழங்கபட்டுள்ளது. இதனால் அனைத்து பகுதிகளிலும் பேருந்துகள் இயங்கத் தொடங்கியது. அதன்பின் தாளவாடி பகுதியிலிருந்து சத்தியமங்கலம் பகுதிக்கு பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டதால் மலைவாழ் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அரசு அறிவித்திருந்த கட்டுப்பாடு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடையை நிரந்தரமாக மூட வேண்டும்… இதனால் பெண்களுக்கு தான் பாதிப்பு… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் திரண்டு வந்து மது கடையை மூடுமாறு கோரிக்கை மனு அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் உள்ள வட்டாணம் ஊராட்சி துணை தலைவர் அய்யப்பன் தலைமையில் தாமோதரன்பட்டினம் கிராம மக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் தாமோதன்பட்டினம் கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் டாஸ்மார்க் கடை உள்ளதால் தினந்தோறும் பல்வேறு பிரச்சனைகள் வருவதாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடிக்க கூட தண்ணீர் வரல… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்… நடவடிக்கை எடுத்த ஆட்சியர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவின் அடிப்படையில் ஆழ்குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சசிகலா திருவாடானை யூனியன் பகுதியில் உள்ள கொடிபங்கு ஊராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு .செய்துள்ளனர், அப்போது அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதில் கொடிபங்கு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு  வருகின்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய ஆழ்குழாய் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சொந்த வீடு இல்ல… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்… திமுக பொறுப்பாளர் மனு…!!

தேனி மாவட்டத்தில் 40 ஆண்டுகளாக சொந்த வீடு இல்லாமல் தவித்து வரும் மக்களின் சார்பில் திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தேனி மாவட்டம் பூதிப்புரம் பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட மக்களுக்கு சொந்த வீடு இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வீடு கேட்டு தனித்தனியாக மனு அளித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் 40 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிக்னலே கிடைக்கல… கோரிக்கை விடுத்த மக்கள்… உறுதி அளித்த அமைச்சர்….!!

நாமக்கல் மாவட்டத்தில் மலைப்பகுதி கிராமங்களில் செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கான பணிகள் விரைவில் நடைபெறும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள பெரப்பஞ்சோலை கிராமம் மலைபகுதியாக உள்ளது. இந்நிலையில் கொரோனாவினால் பள்ளிகள் மூடப்பட்டதினால் மாணவ மாணவிகள் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் கல்வி பெற்று வருகின்றனர். இதனையடுத்து முள்ளுக்குறிச்சி பகுதியில் செல்போன் கோபுரம் உள்ள நிலையில் அங்கிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் மட்டுமே சிக்னல் கிடைக்கும்.மேலும் முள்ளுக்குறிச்சியிலிருந்து பெரப்பஞ்சோலை 8 கிலோமீட்டர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடந்தே செல்ல வேண்டிய நிலை… பெரும் அவதியில் மாணவர்கள்… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் கொல்லூர் என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பேருந்து வசதி இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு 100 முதல் 150 ரூபாய் குடுத்து ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி கல்லூரி மாணவர்களும் கொல்லூரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காமன்கோட்டை பகுதிக்கு நடந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மின் வயர்கள் சரியான பராமரிப்பு இல்லை… அச்சத்தில் பொதுமக்கள்… நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் மின் கம்பங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் மின் விபத்து நடக்கும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் பெரியகுளம் பகுதியில் வடகரை தென்கரை என இரண்டு பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மின் கம்பங்களில் மின் வயர்கள் பின்னி பிணைந்து பாதுகாப்பற்ற முறையில் காணப்படுகின்றது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் மின் வயர்கள் குழந்தைகளுக்கு கை எட்டும் அளவில் இருப்பதால் பெரும் விபத்து ஏற்படும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆமை வேகத்தில் நடைபெறும்… சாலை சீரமைக்கும் பணி… துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கும் பணியை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் செட்டியார் பட்டியில் இருந்து தளவாய் புரத்திற்கு செல்லும் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து இந்த சாலையை சீர் செய்யுமாறு அப்பகுதி பொதுமக்கள் வெகு நாட்களாக கோரிக்கை வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டே நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 100 வழக்குகள்… காவல்துறையினரின் தீவிர முயற்சி… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!

ஊரடங்கின் விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றும் பொதுமக்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்புகின்றனர்.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயபாளையம் சாலையில் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் அத்தியாவசிய தேவை இன்றி சுற்றித் வருவதையும், மரத்தடி மற்றும் சாலை ஓரங்களில் சமூக இடைவெளியின்றியும், முகவசம் அணியாமலும் கூட்டமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதையும் கண்டுள்ளனர். இதனால் கொரோனா தொற்று பரவல் அபாயம் உள்ளதால் சாலையோரம் அமர்ந்து பேசுபவர்களையும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றுபவர்கள் மீதும் காவல்துறையினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அவங்க அதை கடைபிடிக்கல… காவல்துறையினரின் நடவடிக்கை… பொதுமக்களின் கோரிக்கை…!!

முழு ஊரடங்கில் தமிழக அரசு அறிவித்த கட்டுப்பாடு நடவடிக்கைளை மீறியவர்கள் மீது காவல்துறையினர்கள் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையுள்ள அத்தியாவசியப் பொருட்களை மட்டும் வாங்கும் வகையில் மல்லிகை, காய்கறி, பழம், இறைச்சி, மீன் போன்ற சில கடைகளை மட்டும் காலை 10 மணி வரை திறப்பதற்கு அனுமதி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பெட்டிக்கடைகளில் இதே வேலையா போச்சு… நடவடிக்கை எடுங்க… அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க ரோந்து பணியில் ஈடுபடுமாறு காவல் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட சில கிராமங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் படுஜோராக மது பாட்டில்கள் விற்பனை செய்யபட்டு வருகிறது. காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபான கடைகள் செயல்படுகின்றது. எந்த நேரத்திலும் கிடைக்கும் வகையில் சில கிராமங்களில் மது பாட்டில்கள் பெட்டிக்கடைகளில் வைத்து விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

கடுமையாக உயர்ந்துள்ள வெங்காயம் விலை – பொதுமக்‍கள் கோரிக்‍கை

வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அனைத்து கடைகளிலும் குறைந்த விலையில் வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திர தெலுங்கானா மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெங்காய விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு வரத்து குறைந்துள்ளதால் வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஒரு கிலோ வெங்காயம் 30 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை ஊராட்சிமன்ற தலைவர் கொலை வழக்கில் செயலாளர் வீட்டிற்க்கு தீ வைப்பு …!!

மதுரையில் ஊராட்சிமன்ற தலைவர் உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் வீட்டை அடித்து நொறுக்கியதுடன் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் குன்னத்தூர் அருகே ஊராட்சிமன்ற தலைவர் கிருஷ்ணன் உட்பட இருவர் கொலை செய்யப்பட்டனர். இருவரின் உடல்களும், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சொந்த ஊரான குன்னத்தூரில் அடக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் குன்னத்தூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் பணியாற்றி வரும் செயலாளர் வீரனன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவரை உடனடியாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி …!!

எடப்பாடி நகரம் முக்கிய பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி நகரின் முக்கியப் பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக வெள்ளாண்டி வலசு, நைநம்பட்டி, எடப்பாடி பேருந்து நிலையம் தவாம் தெரு, மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெருக்களில் பயத்துடன் நடந்து செல்கின்றனர். சாலைகளில் அதிக அளவில் சுற்றி திரிவதால் வாகன […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டியிடம் வசூலில் ஈடுபடும் காவலர் …!!

திருப்பத்தூர் நகரில் இருசக்கர வாகன போட்டியிடம் வசூலில் ஈடுபட்ட காவலர் ஒருவர் அவரிடம் அடாவடியாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோயில் அருகே மதுபானக் கடை… உடனே மூடுங்க… பொதுமக்கள் கோரிக்கை..!!

கோயில், நூற்பாலை அருகே உள்ள மதுபான கடையை அகற்ற பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலை, ரயில்வே மேம்பாலம் அருகில் கோயில், நூற்பாலை இயங்கிவருகிறது. இப்பகுதியில் முன்பே மதுபான கடை இயங்கி வந்துள்ளது. மக்களின் போராட்டத்தால் அகற்றப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்த பகுதியில் மதுபான கடை செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததால்  மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். கோவில் நூற்பாலை […]

Categories

Tech |