திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மலைகோட்டைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்த போது முத்தழகுபட்டி-சின்னகாளைநகர் சந்திப்பு பகுதியில் 2 பெண்கள் நடந்து சென்றனர். அப்போது ஒரு கல் பயங்கர சத்தத்துடன் மலைக்கோட்டையில் இருந்து உருண்டு வந்ததால் பெண்கள் அச்சத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து எதிரே சாலையில் சுமார் 30 அடி தூரத்தில் நின்று கொண்டிருந்த ஆம்னி வேன் மீது கல் விழுந்தது. மேலும் பள்ளி மாணவர்களை […]
