ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த அனைத்து பொதுமக்களுக்கும் ஊசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாக தமிழக அரசு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக நடத்தி வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ஆண்டிப்பட்டி, எலவடை, தொட்டம்பட்டி, சாமண்ட அள்ளி, தொப்பம்பட்டி, வகுத்தானூர், சென்னம்பட்டி, மொரப்பூர் […]
