வங்கியில் திருட முயன்ற கொள்ளையர்களை பிடிப்பதற்கு காவல்துறையினர் ௪ தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மேற்குரத வீதியில் பொதுத்துறை வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் சிலர் வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்தும், கண்காணிப்பு கேமராக்களின் இணைப்பை துண்டித்தும் திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் பணம் இருக்கும் லாக்கரின் கதவை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனால் வங்கியில் இருந்த 30கோடி […]
