தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பரிதாபமாக இறந்தனர். அத்துடன் 5 பேர் காயம் அடைந்தனர். ஆந்திரா கந்துகுருவில் இந்நிகழ்ச்சியானது நடந்தது. இதற்கிடையில் காயமடைந்த கட்சித்தொண்டர்களை மருத்துவமனையில் சென்று சந்தித்த சந்திரபாபு நாயுடு, இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூபாய். 10 லட்சம் இழப்பீடு அறிவித்தார். அத்துடன் அவர்களது குழந்தைகளின் கல்விக்கு என்டிஆர் அறக்கட்டளை நிதியளிக்கும் […]
