சென்னையில் பொது இடங்களில் குப்பை, கட்டிட கழிவுகளை கொட்டியவர்களுக்கு ரூபாய் 15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நகரை தூய்மையாக வைக்கவும், அழகுடன் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் பொது இடங்களில் குப்பைகள் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் வழங்கப்பட்டு வருகின்றது. பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் வரையப்பட்டுள்ள கலர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு அந்த இடங்களில் தமிழக கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் […]
