மதுரை ரயில் நிலையத்தில் என்ஜின் ரயில் தடம் புரண்டதால் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது. மதுரை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மதுரை வழியாக சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு புறப்பட்டு வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 4.20 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதையடுத்து அந்த ரயிலில் மின்சார எஞ்சினுக்கு பதிலாக டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகாலை 4.50 மணிக்கு ரயில் […]
