தஞ்சை மாவட்டத்தில் தந்தையிடம் பொங்கல் பரிசு தொகையை கேட்டு தகராறு செய்ததால் மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகில் உள்ள சிரமேல்குடி பாலாயி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ராமன்(78) என்பவர். இவருக்கு பாலசுப்பிரமணியம் (50), விஸ்வலிங்கம் (45) என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணமாகி விவசாயக் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் குடும்பத் தலைவரான ராமன் நேற்று தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகையான […]
