மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சலுகைபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிடாரி அம்மாள் மற்றும் பொன்னழகி அம்மாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பெண்கள் வெள்ளை ஆடை அணிந்து அம்மனுக்கு பொங்கல் வைக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று நடைபெற்ற இந்த திருவிழாவில் மதகுப்பட்டி, கீழத்தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து […]
