தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்திலிருந்து தொலைந்து போன தமிழில் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு பைபிள் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மியூசியத்திலிருந்து கடந்த 2005-ல் தொலைந்துபோன 300 வருட பழமையான புராதன பைபிளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தஞ்சையின் மன்னராகயிருந்த சரபோஜிமன்னரின் கையெழுத்திட்ட அந்த பைபிள் சென்ற 2005-ல் தொலைந்து போனதாக புகார் அளிக்கப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. […]
