சிவகங்கையில் கிராம மக்கள் காரைக்குடி-மேலூர் வழியாக பைபாஸ் சாலை அமைக்கப்படுவதை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பாதரக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் கூலி வேலை மற்றும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் காரைக்குடியிலிருந்து மேலூர் பகுதி வரை பைபாஸ் சாலை அமைப்பதற்காக சர்வே அளக்கப்பட்டு பணியும் விரைவாக நடைபெற்று […]
