பைனான்சியரிடம் 25 லட்ச ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள நாட்டறம்பள்ளி பகுதியில் பைனான்சியரான ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஞானசேகரன் தனது நண்பர்களுடன் காரில் குடியாத்தம் பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தார். இதனையடுத்து சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஞானசேகரன் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை பின் தொடர்ந்தனர். அதன்பின் அந்த காரில் வந்தவர்கள் […]
